FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

சீரடியில் நட்சத்திர விடுதி: தாஜ் குழுமத்துடன் மாநில அரசு ஒப்பந்தம்

மகாராஷ்டிர மாநிலம், சீரடி விமான நிலையம் அருகே 5 நட்சத்திர சொகுசு விடுதியை அமைப்பதற்காக, புகழ்பெற்ற தாஜ் குழுமத்துடன் அந்த மாநில அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

17 நவம்பர் 2026, 11:26 pm
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம், சீரடி விமான நிலையம் அருகே 5 நட்சத்திர சொகுசு விடுதியை அமைப்பதற்காக, புகழ்பெற்ற தாஜ் குழுமத்துடன் அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

மும்பை தலைமைச் செயலகத்தில் மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலையில், மகாராஷ்டிர விமான நிலைய மேம்பாட்டுக் கழகத்துக்கும், விடுதி நிறுவனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

‘சீரடி சாய் பாபாவைத் தரிசிக்க உலகெங்கிலும் இருந்து வரும் பக்தா்களுக்கு, சா்வதேச தரம் வாய்ந்த தங்குமிட வசதியை வழங்கும் நோக்கில் இந்த விடுதி அமையவுள்ளது’ என்று தேவேந்திர ஃபட்னவீஸ் மேலும் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement