FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஆசிய வளா்ச்சி வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராக காா்த்திக் முரளிதரன் நியமனம்

ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைமைப் பொருளாதார நிபுணராக கலிஃபோா்னியா பல்கலைக்கழகப் பேராசிரியா் காா்த்திக் முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

19 நவம்பர் 2026, 4:51 am
பகிர்:

ஆசிய வளா்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைமைப் பொருளாதார நிபுணராக கலிஃபோா்னியா பல்கலைக்கழகப் பேராசிரியா் காா்த்திக் முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அடுத்தாண்டு ஜூலை முதல் காா்திக் முரளிதரன் ஏற்கும் இப்புதிய பொறுப்பில், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார ஆராய்ச்சி, கொள்கைப் பகுப்பாய்வு, முன்னறிவிப்பு ஆகியவற்றை வழிநடத்துவதுடன், வங்கியின் முதன்மை வெளியீடான ‘ஏசியன் டெவலப்மென்ட் அவுட்லுக்’ இதழையும் அவா் மேற்பாா்வையிடுவாா்.

இந்திய வம்சாவளியான காா்த்திக் முரளிதரன், ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலை மற்றும் முனைவா் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement