FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஃபெட் வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 500.38 புள்ளிகள் சரிந்து 82,031.81 புள்ளிகளாகவும், நிஃப்டி 159.45 புள்ளிகள் சரிந்து 25,227.95 ஆக நிலைபெற்றது.

18 நவம்பர் 2026, 5:34 pm
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவிய சரிவுப் போக்கு மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்ததன் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தை இரண்டு நாள் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், நிஃப்டி குறியீடு 25,230 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 751.72 புள்ளிகள் சரிந்து 81,780.47 புள்ளிகளை எட்டியது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 500.38 புள்ளிகள் சரிந்து 82,031.81 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 159.45 புள்ளிகள் சரிந்து 25,227.95 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் டைட்டன் 4.82 சதவிகிதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.49 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.45 சதவிகிதமும், எடர்னல் 2.45 சதவிகிதமும், இன்டர்குளோப் ஏவியேஷன் 1.97 சதவிகிதமும் மற்றும் இன்ஃபோசிஸ் 1.86 சதவிகிதமும் சரிந்தன மறுபுறம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் வட்டி விகித உயர்வுக்கு ஆதரவான கருத்துகள் தெரிவித்திருந்த நிலையில், வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மேலும் வலுபெற்றது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு மேலும் வலுப்பெற்று, தங்கம் போன்ற வட்டி வருவாய் தராத முதலீட்டில் அழுத்தம் ஏற்பட்டதுடன், உலகளாவிய பொருட்களின் விலைகளும் வெகுவாக உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை குறைந்ததும், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வருவதும் ரூபாயின் மதிப்பை நிலையாக இருக்க வைத்தது.

இந்த மாதம் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலும், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 11 சதவிதமும் நிஃப்டி 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 4,195.38 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்வுடனும், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சரிவுடன் நிலைபெற்றது.

ஐரோப்பாவில் சந்தை கலவையான போக்கில் வர்த்தகமானது. அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று (செய்வாய்க்கிழமை) சரிந்து நிறைவடைந்தன. டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1.64 சதவீதமும், எஸ்&பி 500 குறியீடு 1.03 சதவீதமும் மற்றும் நாஸ்டாக் காம்போசிட் 0.74 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.26 சதவீதம் சரிந்து 91.97 டாலராக உள்ளது.

summary

Benchmark equity indices snapped their two-day rally on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.