FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீண்ட விடியோவை எளிதாக சிறியதாக்கலாம்! எக்ஸ் தளத்தில் புதிய அம்சம் அறிமுகம்

நீண்ட விடியோவை 5 முதல் 60 விநாடிக்குள் சிறிதாக்கும் வகையிலான புதிய அம்சம் எக்ஸ் தளப் பக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

எக்ஸ்
பகிர்:

நீண்ட விடியோவை 5 முதல் 60 விநாடிக்குள் சிறிதாக்கும் வகையிலான புதிய அம்சம் எக்ஸ் தளப் பக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விடியோ உருவாக்குபவர்களுக்கு உதவும் வகையில் சமூக வலைதள இன்ஃபுளூயன்சர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த அம்சத்தை எக்ஸ் தளம் அறிமுகம் செய்துள்ளது.

Advertisement

Advertisement

எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த விடியோ டூல் மூலம் நீண்ட நேர விடியோவை குறைந்தபட்சமாக 5 விநாடிகள் முதல் அதிகபட்சமாக 60 விநாடிகளுக்குள் குறுக்கி வெட்டிக்கொள்ளலாம். பிறகு வேண்டிய கேப்ஷன்களை இட்டு வேறு பயனருக்கோ அல்லது தங்கள் கணக்கிலோ பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த விடியோவுடன் கிளிப் ஃபிரம் (‘Clip from’) என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் நேரடியாக உண்மையான நேர அளவு கொண்ட விடியோவுக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு முழுமையான விடியோவை பயனர்கள் காணலாம்.

உண்மையான நேர அளவு கொண்ட விடியோவை உருவாக்கியவரின் கணக்கிற்கும் அழைத்துச் செல்லும். இதன்மூலம் அவரின் மற்ற விடியோக்களை பயனர்கள் பார்வையிட முடியும்.

இதன்முலம் பகிர்ந்தவரின் கணக்கில் உள்ள விடியோவுக்கு மட்டுமின்றி உண்மையான விடியோவை உருவாக்கியவரின் கணக்கிற்கும் பார்வை நேரம் கூடும். இதன்மூலம் எக்ஸ் தளத்தில் கிடைக்கும் வருவாயும் கிரியேட்டர்களுக்கு அதிகரிக்கும் என எக்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

summary

X launches video clipping tool that turn long videos into short clips

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.