பங்குச் சந்தை: 9 மாதங்களுக்குப் பின் 25,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிஃப்டி!
நடப்பாண்டில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9 மாதங்களுக்குப் பின் 25,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததைப் பற்றி...
நடப்பாண்டில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9 மாதங்களுக்குப் பின் 25,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
இந்திய பங்குச்சந்தை காலை வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில், அதன்பின்னர் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 286.35 (1.14 சதவிகிதம்) புள்ளிகள் அதிகரித்து 9 மாதங்களுக்குப் பிறகு 25,514.30 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸும் 989.94 புள்ளிகள் (1.13 சதவிகிதம்) அதிகரித்து 83,021.75 புள்ளிகளாக நிறைவடைந்தது.
நடப்பாண்டில் பிப்ரவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு சுமார் 9 மாதங்களில் மீண்டும் நிஃப்டி 25,500 புள்ளிகளைக் கடந்துள்ளது.
Advertisement
Advertisement
நடப்பு வாரத்தில் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவிய போக்கு காரணமாக முதலிரண்டு நாள்கள் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. தொடர் ஏற்றத்தைத்தொடர்ந்து புதன்கிழமை வெளியான ஃபெட் வட்டி விகித உயர்வு அச்சத்தால் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் திடீர் ஏற்றம் ஏன்?
கச்சாப் பொருள்களின் விலை வீழ்ச்சியால் ஆட்டோமொபல் பங்குகள் ஏற்றம் கண்டன. செம்பு (காப்பர்) விலையில் ஏற்பட்ட சரிவால் ப்ளூ ஸ்டார், வோல்டாஸ், பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் நிறுவனங்களின் பங்குகள் 9 சதவிகிதம் வரை உயர்ந்தன.
இன்று ஆட்டோமொபைல்ஸ் மற்றும் வங்கிகளின் பங்குகளால் பங்குச்சந்தை வலுவான ஏற்றம் கண்டது. நிஃப்டி ஆட்டோ குறியீடு 4 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்த மாதம் நவ. 17 ஆம் தேதியிலிருந்து சென்செக்ஸ் கிட்டத்தட்ட 12 சதவிதமும் நிஃப்டி 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன.
பேங்க் நிஃப்டி 1,024 புள்ளிகள் உயர்ந்து முதல் முறையாக 63,000 புள்ளிகளைக் கடந்து, 63,063 என்ற சாதனையுடன் நிறைவடைந்தது. 40-க்கும் மேற்பட்ட நிஃப்டி பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
அதேநேரத்தில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஐடி பங்குகளில் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ் மற்றும் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் நிஃப்டியில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன.
சென்செக்ஸில், மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, நெஸ்லே இந்தியா, என்.டி.பி.சி. லிமிடெட், மேக்ஸ் ஹெல்த்கேர் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை பங்குகள் பெரிதும் லாபம் ஈட்டின.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.11 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 92 அமெரிக்க டாலராக விற்பனை ஆனது. அதேபோன்று ஃபீச்சர் 24 காரட் தங்கத்தின் விலை 0.42 சதவீதம் சரிந்து 10 கிராமுக்கு ரூ.1,29,270 ஆகவும் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,60,807 என்ற விலையில் வர்த்தகமாகின.
The equity benchmark indices BSE Sensex and NSE Nifty staged a broad-based rally on Thursday (November 19), with the Sensex surging 990 points to 83,022 and the Nifty gaining 286 points to close at 25,514.