FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் லாபம்!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை வர்த்தகம்... - ANI
பகிர்:

பங்குச்சந்தைகள் நேற்று நல்ல லாபத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,413.66 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 547.79 (0.69%) புள்ளிகள் உயர்ந்து 79,857.80 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.20 (0.45%) புள்ளிகள் உயர்ந்து 24,647.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

Advertisement

தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இன்று உயர்ந்ததால் பங்குச்சந்தை குறியீடுகள் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி50-ல் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 0.93 சதவீதம், 1.54 சதவீதம் சரிந்தன.

நிஃப்டி ஐடி பங்குகள் 1 சதவீதம் உயர்ந்தது. நிஃப்டி மெட்டல், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

summary

Stock Market: Sensex gains 500 pts, Nifty near 24,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.