முகப்பு

தங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள்!

நாட்டில் தங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள் என்ன என்பது பற்றி...

20 வினாடிகள் முன்பு
தங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள்!
தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, அக்டோபர் மாதம் சப்தமே இல்லாமல் யு டர்ன் எடுக்கத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்து இன்னும் நிற்காமல் குறைந்துகொண்டே செல்கிறது.

தொடர்ச்சியாக 9 வணிக நாள்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

இதனால், மக்கள் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம், ஏன் திடீரென தங்கம் விலை குறைகிறது என்பதே. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காதான் என்று தெரிந்ததும் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

முதல் காரணம், அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலரின் மதிப்பு 19 மாதங்கள் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதால், டாலர் மதிப்பில், விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கமானது, பிற நாட்டு ரூபாய்களைக் கொண்டு தங்கம் வாங்குபவர்களுக்கு இன்னும் அதிக விலை கொண்டதாக மாறியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக தங்கத்திற்கான உலகளாவிய தேவையில் எதிரொலித்து, தற்போது தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

அச்சமூட்டும் அமெரிக்க வங்கி

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்போவதாக அச்சமூட்டி வரும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகளும் காரணமாகின்றன.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் டிசம்பர் மாத முதல் வாரத்தில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, பத்திரங்களின் வருவாய் உயர்வதற்கு வழிவகுத்துள்ளன. அமெரிக்க வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளும், தொடர்ச்சியான பணவீக்கமும் சந்தைகளில் பங்குகளின் விற்பனைக்குக் காரணமாகியிருக்கின்றன.

தங்கம் விற்பனை

முதலீட்டாளர்கள் தங்களது நஷ்டத்தை ஈடு செய்ய தங்கத்தை விற்பனை செய்வதும் ஒரு காரணம். தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பங்குகளில் ஏற்பட்டுள்ள சரிவு, தங்கத்தின் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சில முதலீட்டாளர்கள் மற்ற முதலீடுகளில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, தங்களிடம் இருந்த தங்கத்தை விற்று பணமாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

முதலீடு செய்யலாமா?

நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருந்தாலும், தற்போது விலை குறைந்துகொண்டே செல்கிறதே, இது நீண்ட நாள்களுக்குக் குறைந்த மிகக் குறைந்த விலையில் விற்பனையாகும் என்பது நிச்சயமில்லை என்றும் கூறப்படுகிறது.

summary

Three main reasons for the drop in gold prices!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.