தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழ்! க்ரோவ் நிறுவனர் வாழ்த்து!!
தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு க்ரோவ் நிறுவனர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு க்ரோவ் இணை நிறுவனர் லலித் கேஷ்ரே தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புதிய தேசிய வணிக நாளிதழான தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) அறிமுகம் செய்திருக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்.
புதிய தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு நாட்டின் முன்னணி முதலீட்டுத் தளமான க்ரோவ் இணை நிறுவனர் லலித் கேஷ்ரே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
Advertisement
Advertisement
‘தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்’ (The Financial Standard) இதழைத் தொடங்கியுள்ள ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்திற்கு எனது வாழ்த்துகள்.
இந்தியாவின் முதலீட்டுப் பயணம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது; ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள், குறிப்பாகச் சிறிய நகரங்களிலிருந்து அதிகளவில் சந்தைக்குள் வருகின்றனர். அவர்களுக்கு எளிமையான மற்றும் நம்பகமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்’ தனது வாசகர்களுக்குத் தெளிவான நிதி முடிவுகளை எடுப்பதற்கான தகவல்களை வழங்கும் என்று நான் நம்புகிறேன். குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.