முகப்பு

மெசேஜ்களை ஷெட்யூல் செய்து அனுப்பலாம்! வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம்!

வாட்ஸ்ஆப் செயலியில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்து அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது குறித்து...

38 வினாடிகள் முன்பு
மெசேஜ்களை ஷெட்யூல் செய்து அனுப்பலாம்! வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம்!
வாட்ஸ் ஆப் - கோப்புப் படம்
பகிர்:

வாட்ஸ்ஆப் செயலியில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்து அனுப்பும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் சக பயனர்களுக்கு அனுப்பும் மெசேஜ், புகைப்படம் அல்லது விடியோக்களை 10 நிமிடங்கள் முதல் 14 நாள்கள் வரை ஷெட்யூல் செய்து அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களுக்கு அனுப்புவதற்கும், குழுவில் பகிர்வதற்கும் ஷெட்யூல் அம்சத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Advertisement

Advertisement

இதன்மூலம் பயனரின் ஸ்மார்ட்போனில் டேட்டா இல்லை என்றாலும், ஸ்விட்ச் ஆப் (switch off) ஆகியிருந்தாலும் கூட ஷெட்யூல் நேரப்படி படி சரியாக மெசேஜ்களை அனுப்பிவிடும் என வாட்ஸ்ஆப் கூறுகிறது.

ஷெட்யூல் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் செயலியில் வழக்கமாக மெசேஜ்களை டைப் செய்த பிறகு அல்லது படம் / விடியோவை இணைத்த (அட்டாச்) பிறகு Send பொத்தானை அழுத்துவோம்.

Send பொத்தானை அழுத்திப் பிடித்தால் Pick your desired delivery date and time என திரையில் தோன்றும்.

இதில் ஷெட்யூல் செய்ய வேண்டிய தேதி, நேரம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

குழு அல்லது தனி நபருக்கு ஷெட்யூல் செய்யும் மெசேஜ்களின் எண்ணிக்கை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஷெட்யூல் செய்தவைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், ஷெட்யூல் செய்த பட்டியல் திரையில் தோன்றும். அவற்றில் எதை வேண்டுமானாலும் எடிட் அல்லது நீக்கவும் செய்யலாம்.

ஷெட்யூல் செய்யும் மெசேஜ்கள் டெக்ஸ்ட், புகைப்படம், விடியோ என எந்த ஃபார்மட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

summary

Regarding the introduction of a feature to schedule and send messages on the WhatsApp app...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.