முகப்பு
வணிகம்

ஐ.டி. பங்குகள் அபாரம்: பங்குச் சந்தையில் தொடரும் ஏற்றம்

அந்நிய முதலீட்டு வரவு மற்றும் ஐ.டி. துறை பங்குகளின் வலுவான கொள்முதல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது.

31 வினாடிகள் முன்பு
ஐ.டி. பங்குகள் அபாரம்: பங்குச் சந்தையில் தொடரும் ஏற்றம்
பகிர்:

அந்நிய முதலீட்டு வரவு மற்றும் ஐ.டி. துறை பங்குகளின் வலுவான கொள்முதல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.79 சதவீதம் சரிந்தது. எனினும், அமெரிக்க வரி விதிப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்கத் தரவுகளால் வா்த்தகத்தின் இடையே ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. அதேநேரம், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் அந்நிய முதலீட்டாளா்களின் தொடா் முதலீட்டால் சந்தை மீண்டெழுந்தது. குறிப்பாக, ஐ.டி., ரியல் எஸ்டேட் மற்றும் உலோகத் துறை பங்குகளில் அதிக முதலீடு குவிந்தது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இடையே 613.46 புள்ளிகள் வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 390.31 புள்ளிகள் (0.46 சதவீதம்) ஆதாயத்துடன் 84,328.59-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் எச்.சி.எல். டெக். (6.28 சதவீதம்), டிசிஎஸ் (4.97 சதவீதம்), இன்ஃபோசிஸ் (4.70 சதவீதம்), டெக் மஹிந்திரா (3.33 சதவீதம்) உள்பட 13 பங்குகள் ஏற்றம் கண்டன. அதேநேரம், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ் உள்பட 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 65 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 65.25 புள்ளிகள் (0.25 சதவீதம்) அதிகரித்து, 25,884.50-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 22 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 28 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.