முகப்பு

சென்செக்ஸ் 989 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,610 க்கு கீழ் வர்த்தகம்!!

சென்செக்ஸ் 989.33 புள்ளிகள் சரிந்து 83,339.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 277.30 புள்ளிகள் சரிந்து 25,607.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

27 நவம்பர் 2026, 5:42 pm
சென்செக்ஸ் 989 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,610 க்கு கீழ் வர்த்தகம்!!
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ஐடி மற்றும் எச்டிஎஃப்சி பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபப் பதிவு மேற்கொண்டதாலும், கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்ததாலும், இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 989 புள்ளிகளும், நிஃப்டி 25,610 க்கு கீழே நிறைவடைந்தது. இதன் மூலம், முக்கியப் பங்கு குறியீடுகளின் இரண்டு நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,120.26 புள்ளிகள் சரிந்து 83,208.33 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 989.33 புள்ளிகள் சரிந்து 83,339.26 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 277.30 புள்ளிகள் சரிந்து 25,607.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா ஸ்டீல், பவர் கிரிட் மற்றும் டிரெண்ட்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

Advertisement

Advertisement

கடந்த நான்கு வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, இன்றயை வர்த்தக முடிவில் கடுமையாக சரிந்தன. இதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் உள்ளூர் பத்திர வருவாய் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக அமைந்தன. இதனிடையே ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறை பங்குகளும் சரிந்தன.

மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றும் கவலை எழுந்துள்ளது. அதே நேரத்தில், ஆசிய நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பங்குகள் மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளன. இதனால், உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளில் ஒரு பகுதியை இந்திய சந்தையிலிருந்து ஆசிய செயற்கை நுண்ணறிவு பங்குகளுக்கு மாற்றியமைக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 5,843.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி 4.34 சதவீதமும் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு 3.73 சதவீதம் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கி 225 2.11% உயர்ந்த நிலையில் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 2.11% உயர்ந்தது.

ஐரோப்பிய சந்தை உயர்ந்து நிறைவடைந்தன. நன்றி தெரிவிக்கும் நாள் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.76 சதவீதம் உயர்ந்து 97.22 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Benchmark equity indices snapped their two-day rally on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.