டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3 வது நாளாக வலுவடைந்தது.
மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான உடனடித் தேவையை குறைக்கவும், அதிகப்படியான வர்த்தக நிலையை கட்டுப்படுத்தவும் ஆர்பிஐ மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3 வது நாளாக வலுவடைந்தது 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.
குறிப்பிட்ட வங்கிகள் மூலம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தனியாக டாலர் வசதியை வழங்குதல் மற்றும் 'ஹெட்ஜிங்' பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முலம் உடனடிச் சந்தையில் டாலருக்கான தேவை குறையும், அதே வேளையில், ரூபாய் மீதான நிகரான ஊக வர்த்தக நிலையைக் கட்டுப்படுத்த இது உதவும் என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.53 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, வர்த்தகத்தின் போது, அதிகபட்சமாக ரூ. 94.96 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 95.53 வரையிலும் சென்றது. முடிவில், ரூபாய் மதிப்பு ரூ. 95.38 ஆக இருந்தது. இது அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவிலிருந்து 40 காசுகள் உயர்வாகும்.
Advertisement
Advertisement
நேற்று (திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பு 93 காசுகள் உயர்ந்து, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்து, டாலருக்கு நிகராக ரூ. 95.78 என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த மூன்று வர்த்தக நாளில், ரூபாய் மதிப்பு மொத்தம் 150 காசுகள் உயர்ந்துள்ளது.
Rupee strengthened for the third straight session on Tuesday and appreciated 40 paise to close at 95.38 against the US dollar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.