FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உள்நாட்டு சந்தையில் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஹூண்டாய் திட்டம்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு கார் விற்பனையை 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் இலக்கை இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

28 அக்டோபர் 2026, 10:03 pm
ஹூண்டாய் கார்
பகிர்:

புதுதில்லி: ஹூண்டாய் மோட்டார் இந்தியா, நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு கார் விற்பனையை 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் இலக்கை இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ஏற்றுமதி வளர்ச்சி இரட்டை இலக்க சதவீதத்தில் இருக்கும் என்றும் நிறுவனம் கணித்துள்ளது.

பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு, புனே ஆலையில் மூலம் கிடைக்கும் கூடுதல் உற்பத்தித் திறன் மற்றும் புதிய தயாரிப்புகள் ஆகியவற்றின் ஆதரவுடன், நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு விற்பனையை 8 முதல்10 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கான பாதையில் பயணித்து வருகிறோம்.

நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த வாகனத் துறையின் வளர்ச்சியைவிட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தருண் கார்க் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

நிதியாண்டின் முதல் பாதியில், ஹூண்டாயின் உள்நாட்டு விற்பனை அளவு 12.3 சதவீதம் அதிகரித்து 3.05 லட்சம் வாகனங்களாகவும், ஏற்றுமதி 7.6 சதவீதம் அதிகரித்து 92,000 வாகனங்களாக உயர்ந்துள்ளது. முதல் பாதியில் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் பின்தங்கியிருந்தது.

கிராமப்புற தேவை வலுவாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் கிராமப்புற வளர்ச்சி நகர்ப்புற வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும் என்றார்.

இதற்கிடையில், இரண்டாம் காலாண்டில் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை நிறுவனத்தின் லாபத்தைக் குறைத்துள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால், நாங்கள் நிச்சயமாக விலை உயர்வை மேற்கொள்வோம்.

summary

Hyundai Motor India reaffirmed its domestic volume growth guidance of 8-10 per cent for the financial year 2026-27.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments