42 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி! ஏசஸ் விவோபுக் 15 மடிக்கணினி அறிமுகம்!
ஏசஸ் நிறுவனத்தில் புதிதாக விவோபுக் 15 மடிக்கணினி அறிமுகமாகியுள்ளது குறித்து...
ஏசஸ் நிறுவனத்தில் புதிதாக விவோபுக் 15 மடிக்கணினி புதிதாக அறிமுகமாகியுள்ளது. ராணுவ தர சோதனைக்குட்படுத்தப்பட்டு இதன் வடிவமைப்பின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தைவானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏசஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது புதிதாக ஏசஸ் விவோபுக் 15 என்ற மிகவும் மெலிதான மற்றும் எடைக்குறைவான மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதன் விலை ரூ. 73,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அமேசான் இணைய விற்பனை தளத்தில் 30% தள்ளுபடியுடன் ரூ. 52,050க்கு விற்பனையாகிறது.
சிறப்பம்சங்கள்
ஏசஸ் விவோபுக் 15 மடிக்கணினி 15.6 அங்குல முழு எச்.சி. திரை உடையது.
ஏர்கோ சென்ஸ் டிராக்பேட் (சிறப்பு மவுஸ்பேட்) இடம்பெற்றுள்ளது.
வின்டோஸ் 11 ஹோம் இயங்குதளம் உடையது.
மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஹோம் 2024, மைக்ரோசாஃப் 365 பேசிக் கொண்டது
அடோப் கிரியேட்டிவ் கிளவுட் மற்றும் மெக்காபி பாதுகாப்பு மென்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன.
முன்புறம் 720p HD கேமரா உள்ளது.
பேட்டரி திறன் 42 மணி நேரம் நீடிக்கும் என ஏசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ASUS Vivobook 15 Thin Light Laptop with Intel Graphics
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.