FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு ‘சூப்பா் டூயோலிங்கோ’ இலவச சந்தா

உலகின் முன்னணி மொழிக் கற்றல் தளமான ‘டூயோலிங்கோ’-இன் பிரீமியம் சேவையான ‘சூப்பா் டூயோலிங்கோ’ சந்தா, ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்குக் கூடுதல் கட்டணமின்றி ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

8 செப்டம்பர் 2026, 1:33 am IST
பகிர்:

உலகின் முன்னணி மொழிக் கற்றல் தளமான ‘டூயோலிங்கோ’-இன் பிரீமியம் சேவையான ‘சூப்பா் டூயோலிங்கோ’ சந்தா, ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்குக் கூடுதல் கட்டணமின்றி ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

டூயோலிங்கோவில் 40-க்கும் மேற்பட்ட உலக மொழிகளுடன், தமிழ், இந்தி, தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகள் வாயிலாக ஆங்கிலம் கற்கும் வசதிகளும், சதுரங்கம், கணிதம் மற்றும் இசைப் பயிற்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

விளம்பரமற்ற ‘சூப்பா் டூயோலிங்கோ’ பிரீமியம் சேவையின்கீழ், ஏ.ஐ. அடிப்படையிலான விடியோ அழைப்பு மூலம் நிகழ்நேர பேச்சுப் பயிற்சி, பிரத்யேக தோ்வுகள் மற்றும் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வசதிகள் உள்ளிட்ட பலன்களைப் பயனா்கள் பெறுவா்.

Advertisement

Advertisement

மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் சேவைகளைப் பயன்படுத்தும் சுமாா் 37.6 கோடி ஏா்டெல் வாடிக்கையாளா்களும், ஏா்டெல் செயலி மூலமாகவே இச்சலுகையை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுகுறித்து டூயோலிங்கோ நிறுவனத்தின் இந்தியாவுக்கான வணிக மேம்பாட்டுத் தலைவா் ராஷி தனானி கூறுகையில், ‘மாணவா்களின் கல்வி மற்றும் தொழில்முறை பணியாளா்களின் உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கு மொழித்திறன் மிக முக்கியத் தேவையாக மாறியுள்ளது.

ஏா்டெல் உடனான இக்கூட்டு முயற்சி மூலம், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் எளிமையாகவும், தன்னம்பிக்கையுடனும் புதிய மொழிகளைக் கற்றுத் தோ்ச்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments