FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 299 புள்ளிகளுடனும், 23,400 புள்ளிகளை கடந்த நிஃப்டி!

சென்செக்ஸ் 299.17 புள்ளிகள் உயர்ந்து 74,828.25 ஆகவும், நிஃப்டி 117.80 புள்ளிகள் உயர்ந்து 23,446.80 ஆக நிலைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 5:05 pm IST
பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ஐடி பங்குகளைத் தவிர, அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்கள் பரவலாக பங்குகளை வாங்கியதால், இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 299 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 23,400 புள்ளிகளை கடந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இன்று கலவையான உலகளாவிய போக்குகள் இருந்தபோதிலும், உலோகம், ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பங்குகளில் ஏற்பட்ட வாங்குதலால், பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கி, அமர்வு முழுவதும் தொடர்ந்தது.

தொடர்ந்து ஆறாவது அமர்வாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, சந்தைக்கு இது உதவிய நிலையில், இன்று ஐடி பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம், பங்குச் சந்தையின் ஏற்றத்தை இது வெகுவாக கட்டுப்படுத்தியது.

Advertisement

Advertisement

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 299.17 புள்ளிகள் உயர்ந்து 74,828.25 ஆகவும், நிஃப்டி 117.80 புள்ளிகள் உயர்ந்து 23,446.80 ஆக நிலைபெற்றது.

நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் ஸ்மால்கேப் 100 குறியீடுகள் முறையே 0.7% மற்றும் 0.9% உயர்ந்தன.

நிஃப்டி-யில் டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் கோல் இந்தியா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.

துறைசார்ந்த உலோக பங்குகள் 2.4 சதவீதம் உயர்ந்து முன்னிலை வகித்த நிலையில், தொலைத்தொடர்பு, பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் எஃப்.எம்.சி.ஜி உள்ளிட்டவை தலா 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. ஐடி துறை 0.8 சதவீதமும், ஊடகத் துறை 0.5 சதவீதமும் சரிந்தன.

யுபிஎஸ் நிறுவனம் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தை 'நடுநிலை' என்றும், எல்&டி ஃபைனான்ஸ் நிறுவனத்தை 'வாங்கலாம்' என்றும் தரம் உயர்த்தியதையடுத்து, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் எல்&டி ஃபைனான்ஸ் முறையே 2 முதல் 3% வரை லாபம் ஈட்டின. ஒரே ஒப்பந்தத்தில் 1.28 கோடி பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து, டெக்ஸ்மாகோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் 7% உயர்ந்தன.

புதிய பங்குகள் வெளியீடு

நிஃப்டி-யில் அதன் ஐபிஓ விலையான ரூ. 84 ஆக பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து, 2.38% சரிந்து ரூ. 82 ஆக வர்த்தகமான நிலையில், இறுதி வர்த்தகத்தில், 'ஹீரோ மோட்டார்ஸ்' பங்குகள் 17% உயர்ந்து ரூ. 98.50 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மும்பை பங்குச் சந்தையில், எஸ்எஸ் ரீடெய்ல் நிறுவனம், தனது ஐபிஓ விலையான ரூ. 124 ஐ விட 50 சதவீதத்துக்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டு வலுவான அறிமுகத்தை தொடர்ந்தது. பிறகான வர்த்தகத்தில், அதன் பங்கு விலை 80.87% உயர்ந்து ரூ. 767 ஆக நிறைவு பெற்றது.

ஜிண்டால் சுப்ரீம் நிறுவனத்தின், ஐபிஓ விலையான ரூ. 93 ஐ விட 29% க்கும் அதிகமான பிரீமியத்துடன் ரூ. 120 ஆக பட்டியலிடப்பட்ட பிறகு, 81% உயர்ந்து ரூ. 128 ஐ எட்டியது.

summary

Indian equity indices rebounded on September 23, with Nifty reclaiming the 23,400 mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments