டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 95.95 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிறைவு.
மும்பை: அமெரிக்க டாலரின் வலுவான நிலை மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சிறிய மீட்சி ஆகியவற்றின் தாக்கத்தால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிறைவடைந்தது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் கொள்கை நிலைப்பாடு சார்ந்த கருத்துகளால், டாலர் வலுவடைந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்தக் கருத்துகள் அடிப்படையில், 2026 ல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.58 ஆக வர்த்தகம் தொடங்கி, பிறகு வலுவடைந்து அதிகபட்சநமாக ரூ. 95.57 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 95.76 எட்டியது. இறுதியில், முந்தைய நாள் நிறைவு விலையை விட 12 காசுகள் சரிந்து, ரூ. 95.74 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
நேற்று செவ்வாய்க்கிழமையன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.62 ஆக நிறைவடைந்தது.
The rupee fell 12 paise to close at 95.74 against the US dollar on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.