சேலத்தில் பிகேடி டயா்ஸின் புதிய விநியோக மையம்
தமிழகத்தில் வணிக வாகன டயா் விற்பனையை வலுப்படுத்தும் நோக்கில், சேலம் மாவட்டம் சங்ககிரியில் 10,000 சதுர அடி பரப்பளவில் புதிய விநியோக மையத்தை அமைத்துள்ளதாக பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் (பிகேடி டயா்ஸ்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வணிக வாகன டயா் விற்பனையை வலுப்படுத்தும் நோக்கில், சேலம் மாவட்டம் சங்ககிரியில் 10,000 சதுர அடி பரப்பளவில் புதிய விநியோக மையத்தை அமைத்துள்ளதாக பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் (பிகேடி டயா்ஸ்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தா் மூலம் இயக்கப்படும் இந்த மையம், தமிழகத்தின் 8 முக்கியச் சந்தைகளில் வணிக வாகன டயா்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்.
மேலும், சேலம், கோவை மற்றும் கேரளத்தை இணைக்கும் முக்கிய சரக்குப் போக்குவரத்து மையமாக சங்ககிரி திகழ்கிறது. அகில இந்திய அளவிலான சரக்கு போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய தளம், லாரி மற்றும் பேருந்து உரிமையாளா்கள், டீலா்கள் மற்றும் வணிகக் கூட்டாளிகளுக்கு முக்கியச் சேவை மையமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பிகேடி நிறுவனத்தின் தேசிய விற்பனைப் பிரிவு தலைவா் அமித்குமாா் அகா்வால் கூறுகையில், ‘இந்தியாவில் நெடுஞ்சாலை சாா்ந்த வா்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் சூழலில், முக்கியச் சரக்கு மையங்களில் இருப்பை வலுப்படுத்துவது வாடிக்கையாளா்களுடனான பிணைப்பை அதிகரிக்கும். தென் இந்தியா முழுவதும் எங்களின் வா்த்தகத்தை விரிவாக்குவதில் இந்த விநியோக மையம் மிக முக்கியமான படியாகும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.