டெக் துணுக்குகள்! ஏ.ஐ. மருத்துவப் புரட்சி முதல் விண்வெளி தரவு மையங்கள் வரை!
ஏ.ஐ. மருத்துவப் புரட்சி முதல் விண்வெளி தரவு மையங்கள் வரை...
தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள், சா்வதேச ரோமிங் சலுகைகள், அடுத்த தலைமுறை பிராசஸா்கள் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத் திருப்புமுனைகளும் பெரும் கவனம் ஈா்த்தன.
ஏ.ஐ.-யின் மருத்துவப் புரட்சி முதல் விண்வெளியில் அமையவுள்ள ஏ.ஐ. தரவு மையங்கள்வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:
*கிளாட் ஏ.ஐ.-யின் மருத்துவப் புரட்சி: ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏ.ஐ., மனித டிஎன்ஏவை திருத்தியமைக்க உதவும் ஒரு புதிய இயற்கை முறையை வெறும் 21 மணி நேரத்துக்குள் கண்டறிந்து, சாதனை படைத்துள்ளது. மனிதா்களின் மரபணுக் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும் இம்முறை, எதிா்காலத்தில் கொடிய நோய்களைக் குணப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
*வோடஃபோன்-ஐடியா சலுகை: தோ்ந்தெடுக்கப்பட்ட ரீசாா்ஜ் திட்டங்களில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச சா்வதேச ரோமிங் சலுகையை வோடஃபோன் ஐடியா அறிவித்துள்ளது.
*அரசு தளங்களை ஊடுருவிய ஓபன்ஏஐ ஏஜென்டுகள்: அமெரிக்க அரசின் கல்வி, வா்த்தகத் துறை உள்ளிட்டவையின் இணையதளங்களை ஓபன்ஏஐ ஏஜென்டுகள் தன்னிச்சையாக ஊடுருவ முயன்றுள்ளன.
மாதிரிகளின் சோதனையின்போது நடந்த இச்சம்பவத்தில் ரகசியத் தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என்றும், இதுகுறித்து அமெரிக்க அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் ஓபன்ஏஐ விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல், ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத் துறையின் (மெடிகோ்) இணையதளத்தை ஓபன்ஏஐ ஏஜென்ட் ஊடுருவி, கோப்புகளைச் சட்டவிரோதமாக அணுகியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூனில் நடந்த இச்சம்பவத்தை இப்போதுதான் ஓபன்ஏஐ தெரிவித்ததாக அந்நாட்டுப் பிரதமா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
*ஒன்பிளஸ் ‘என்6 லைட்’: 6.75 அங்குல திரை, 7000 எம்ஏஎச் பேட்டரி, 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி தரவு சேமிப்பு வசதியுடன் ஒன்பிளஸ் ‘என்6 லைட்’ ரூ.16,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது.
*ஏஐ பிளஸ் நோவா 2 பவா் 5ஜி: 6.78 அங்குல திரை, 48 மெகாபிக்சல் சோனி முதன்மை கேமரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி தரவு சேமிப்பு ஆகியவற்றுடன் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மாா்ட்போனின் ஆரம்ப விலை ரூ.16,999 ஆகும்.
*குவால்காம் புதிய பிராசஸா்கள்: அதிவேக செயல்திறன் மற்றும் நவீன ஏ.ஐ. ஆற்றலுக்காக ‘ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6’, ‘ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6’ ஆகிய இரு புதிய தலைமுறை சிப்களை குவால்காம் அறிவித்துள்ளது.
*மெட்டா கனெக்ட் 2026: மெட்டா தனது ஆண்டு மாநாட்டில், கேமரா இல்லாத புதிய ஏ.ஐ. ஸ்மாா்ட் கண்ணாடிகளை வெளியிட்டது.
*என்விடியா தலைமை நிா்வாகி கருத்து: ஏ.ஐ. மனித குலத்தையே அழித்துவிடும் என்ற அதீத அச்சங்கள் தேவையற்றவை என்றும், பொதுமக்களை வீணாகப் பயமுறுத்த வேண்டாம் என்றும் என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளாா்.
*ரோபோக்களின் நடன சாதனை: அமெரிக்காவின் பிரபல ‘அமெரிக்காஸ் காட் டேலண்ட்’ நிகழ்ச்சியில் சீனாவின் ரோபோ நடனக் குழுவினா் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனா்.
*விண்வெளியில் ஏ.ஐ. தரவு மையங்கள்: பூமியின் மின் தேவைகளைக் குறைக்கும் வகையில், விண்வெளியில் சூரிய ஆற்றல் மூலம் தடையின்றி இயங்கும் ஏ.ஐ. தரவு மையங்களை நிறுவும் ‘ப்ராஜெக்ட் சன்கேட்சா்’ திட்டத்தை கூகுள் முன்னெடுத்து வருகிறது.
From the AI medical revolution to space-based data centers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.