முகப்பு
சைவ வகைகள்

பொட்டுக்கடலை முறுக்கு

இந்த மாவுடன் சிறிது, சிறிதாகத் தண்ணீர் விட்டு சற்று கெட்டியான மாவாகப் பிசைந்து வைத்துக்  கொள்ளவும். 

Updated On : 6 செப்டம்பர், 2016 at 12:00 AM
பகிர்:


தேவையானவை:
அரிசி மாவு - 1 கிண்ணம்
பொட்டுக்கடலை மாவு - 1 கிண்ணம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கறுப்பு எள் - 1 தேக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: பொட்டுக் கடலை மாவையும், அரிசி மாவையும் நன்றாகச் சலித்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். மாவுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்  தூள், எள், ஓமம், சீரகம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த மாவுடன் சிறிது, சிறிதாகத் தண்ணீர் விட்டு சற்று கெட்டியான மாவாகப் பிசைந்து வைத்துக்  கொள்ளவும். 

இதனுடன் தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்துப் பிசைந்து, முறுக்கு நாழியில் மூன்று மூன்று துளைகள் கொண்ட அச்சினை வைத்துப் பொன்னிறமாக  பொரித்தெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.