பகுதி - 932
‘காலன் எனை அணுகாமல்..
‘காலன் எனை அணுகாமல் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வடவேங்கடத்துக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
Advertisement
Advertisement
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன தனதான
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம யவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
தாந்துணை யாவரென மடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோய்ந்துரு காவறிவு தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவ தியல்போதான்
காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர வணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின் மணவாளா
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி லுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு பெருமாளே.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.