09.06.1949: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி பிறந்த தினம் இன்று!
கிரண் பேடி ஓய்வு பெற்ற காவலரும், ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார்.
கிரண் பேடி ஓய்வு பெற்ற காவலரும், ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார்.
1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது, திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. 1994ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.
2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார்.2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப் பொறுப்பேற்ற இவர், அதற்பொழுது அப்பதவியில் இருக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.