பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 5
புண்ணியங்களைச் செய்து
பாடல் - 5
புண்ணியம் செய்து, நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம், இப்பிறப்பு அறுக்கும், அப்பால்
திண்ணம் நாம் அறியச்சொன்னோம், செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்.
புண்ணியங்களைச் செய்து, நல்ல நீரோடு மலர்களைத் தூவி, செறிந்த சோலைகள் நிறைந்த திருவனந்தபுரத்திலே அருள்புரியும் எம்பெருமானின் திருப்பெயரை எண்ணுங்கள், இந்தப் பிறவி அறுந்துபோகும், அதன்பிறகு, அந்த அண்ணலின் தாமரைத் திருப்பாதங்களை வணங்குங்கள், அப்படி வணங்கியவர்கள் அமரர்களாவார்கள், இதை நாம் உறுதியாகச் சொன்னோம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.