பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 6
எனக்கு அன்பானவனே
பாடல் 6
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், இனி உண்டொழிவாய்,
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண், செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா, என் அன்பேயோ.
புனத்திலே பூத்த காயாம்பூவைப்போன்ற நிறத்தைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்கள், செங்கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, உனக்கு ஏற்ற அழகைக்கொண்டவள், பூவிலே எழுந்தருளியிருக்கும் திருமகளின் அன்பனே, எனக்கு அன்பானவனே, என்னுடைய ஆரா அமுதமான நீ எனக்குள் பெரும் விருப்பத்தை உண்டாக்கி என்னுடைய ஆவியை, இனிய உயிரை உண்டாய், இனியும் அவ்வாறே உண்பாய்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.