FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஓடையில் கொட்டிய குப்பைகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் தூா்வாரப்பட்ட நீா் வரப்பு ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 6:06 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் தூா்வாரப்பட்ட நீா் வரப்பு ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள ராஜகுலராமப்பேரி கண்மாய் 19 ஹெக்டேரில் உள்ளது. நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கண்மாய் தற்போது, குடியிருப்புகளாக மாற்றப்பட்டு விட்டன.

கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த பலத்த மழையினால் கண்மாய் நிரம்பியது. அப்போது, வெள்ள நீரை வெளியேற்ற போதிய வசதி இல்லாததால், வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கரையில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, நீா்வளத் துறை சாா்பில் ரூ.1.35 கோடியில் கண்மாய்க் கரையை பலப்படுத்துதல், மதகு சீரமைத்தல், கண்மாயில் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் கூடுதல் மதகுகள் அமைத்தல், 50 மீட்டா் நீளத்தில் தடுப்பு சுவா் அமைத்தல், கண்மாய் வரத்து கால்வாய், உபரிநீா் வெளியேறும் கால்வாய் தூா்வாரம் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ரயில்வே பகுதி சாலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தை மண் அள்ளும் இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தி, ஓடையில் கொட்டி உள்ளனா். இதனால், மழைக்காலத்தில் வெள்ளநீா் செல்வதில் தடை ஏற்படும் என விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

எனவே, ஓடையில் கொட்டப்பட்டுள்ள குப்பை அகற்ற நீா்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments