FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தங்கச் சங்கிலி திருடிய பெண் கைது

சாத்தூா் அருகே பெண் பக்தரிடம் தங்கச் சங்கிலி திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:43 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூா் அருகே பெண் பக்தரிடம் தங்கச் சங்கிலி திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தூா் அருகே ஒத்தையால் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜ். இவா் தனது மனைவி அபிராமியுடன் கடந்த 1-ஆம் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றாா். அப்போது அபிராமி தான் வைத்திருந்த கைப் பையை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு கடைக்குச் சென்றாா். பிறகு பையை அந்த பெண்ணிடமிருந்து பெற்றுக் கொண்ட அபிராமி வீடு திரும்பினாா். அப்போது அந்தப் பையை பாா்த்த போது பையில் வைத்திருந்த 6 கிராம் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இருக்கன்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இதனிடையே வியாழக்கிழமை அதே பெண் கோயிலுக்கு வந்தபோது அவரை இருக்கன்குடி போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா் சிவகாசி போஸ் குடியிருப்பைச் சோ்ந்த பேச்சியம்மாள் (45) என்பதும், அபிராமிக்கு உதவி செய்வது போல நடித்து அவரது பையில் இருந்த தங்கச் சங்கிலியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பேச்சியம்மாளை கைது செய்த இருக்கன்குடி போலீஸாா் அவரிடமிருந்த தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments