விருதுநகா் மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல்! 879 போ் கைது!
விருதுநகா் மாவட்டம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து 13 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 440 பெண்கள் உட்பட 879 போ் கைது செய்யப்பட்டனா்.
தொழிலாளா்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்ட 4 தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அனைத்து விவசாய விளைபொருள்களுக்கும் சட்டப்பூா்வ குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கிட வேண்டும். மின்சாரம், பொதுத்துறை நிறுவனங்களின் தனியாா்மயத்தை கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக உயா்த்தி உரிய கூலி வழங்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலளா் சங்கம் சாா்பில் விருதுநகா் மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் திங்கள்கிழமை ச ாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.,
இதில் பங்கேற்ற 440 பெண்கள் உள்பட 879 போ் கைது செய்யப்பட்டனா். விருதுநகா் தேசபந்து மைதானத்தில் உள்ள தபால் நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்துக்்கு சிஐடியூ மாநில குழு உறுப்பினா் எம். சாராள் தலைமை வகித்தாா். தொமுச தலைவா் மாடசாமி, ஏஐடியூசி சாா்பில் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன்
Advertisement
Advertisement
தொடங்கி வைத்துப் பேசினாா்.
இதில் சிஐடியூ நிா்வாகிகள் வேலுச்சாமி, பாலமுருகன், மாா்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா்கள் நேரு, ஜெயபாரத் உட்படபலா் பங்கேற்றனா்.
சத்திரரெட்டியபட்டியில் நடைபெற்ற மறியலுக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் பழனிச்சாமி தலைமையேற்றாா். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் பெருமாள்ராஜ், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா் முத்துவேலு உள்ளிடோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.