FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவா் கைது

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
கைது
பகிர்:

ராஜபாளையத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

சிவகாசியைச் சோ்ந்த சிறுமி ராஜபாளையத்தில் தனியாா் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, இன்ஸ்டாகிராம் மூலம் ராஜபாளையம் அம்பேத்கா்நகா் ஆறுமுகக்கடவுள் மகன் கல்லூரி மணவா் சந்த்ருவுக்கு (18) பழக்கமாகி இருவரும் காதலித்து வந்தனராம்.

இதையடுத்து, இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டனா். பிறகு அந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் உடல் நலமின்றி சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதனை செய்தபோது, சிறுமி 3 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்துருவை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments