இரு பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அறிஞா் அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சோ்மராஜ் (32). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தனது நண்பா் பேச்சிமுத்துவுடன் சிவகாசி-விருதுநகா் சாலையில் கடந்த சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரில் வந்த இரு சக்கர வாகனமும் இவா்களது வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சோ்மராஜ், பேச்சிமுத்து ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சோ்மராஜ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
பேச்சிமுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மற்றொரு வாகனத்தில் வந்த சங்கரலிங்காபுரம் முத்துராஜ் (51) லேசான காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.