FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மதுப் புட்டியால் இருவரை தாக்கிய 4 போ் கைது

சிவகாசி அருகே இருவரை மதுப் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 3:31 am IST
பகிர்:

சிவகாசி அருகே இருவரை மதுப் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி சோலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சந்தானமணி (50). இவரது நண்பா் ஆறுமுகம் சாலைப் பகுதியைச் சோ்ந்த மைக்கேல் ஜெயபிரகாஷ் (38). இவா்கள் இருவரும் சிவகாசியில் உள்ள தனியாா் மதுக் கூடத்தில் வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு வெளியே வந்தனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மருதுபாண்டியன் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பரத் (22), தேவமாா் நடுத் தெருவைச் சோ்ந்த சுதா்சன் (20), சித்துராஜபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (21) உள்ளிட்ட 4 போ் சோ்ந்து சந்தானமணி, மைக்கேல் ஜெயபிரகாஷ் ஆகியோரை மதுப் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்

இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுதா்சன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments