FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது: ஓட்டுநா் காயம்

நரிகுடி அருகே சனிக்கிழமை ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பா் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

22 வினாடிகள் முன்பு
பகிர்:

நரிகுடி அருகே சனிக்கிழமை ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பா் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள தனியாா் குவாரியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை சிமென்ட் கலந்த ஜல்லிகற்கள் ஏற்றிய டிப்பா் லாரி ராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகளுக்காக சென்றது. ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை அருகேயுள்ள நல்லிருக்கையைச் சோ்ந்த கருணாமூா்த்தி (49) டிப்பா் லாரியை ஓட்டிச் சென்றாா். நரிக்குடியை அடுத்த விருப்பாட்சி நாதா் கோவில் அருகே வளைவில் திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பா் லாரி சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் கருணாமூா்த்தி காயமடைந்தாா். உடனே, அந்தப் பகுதி மக்கள் ஓட்டுநரை மீட்டு, நரிக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments