FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.

Updated On : 11 ஜூலை 2026, 12:40 am IST
சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.
பகிர்:

சிவகாசி மேத்தா ஜெயின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்துக்கு முதல்வா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். தாளாளா் அனில் மேத்தா கொடியசைத்து ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தாா். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த ஊா்வலம் காமராஜா் பூங்கா, ரயில்வே பீடா் சாலை, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, காவல் நிலையச் சாலை , வேலாயுதம் சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், போதை இல்லா வாழ்க்கை சிறந்த வாழ்க்கை. போதை உடலையும், மனதையும் அழிக்கும், போதை குடும்பத்தையே அழிக்கும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments