புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞா் கைது
வெம்பக்கோட்டை அருகே அரசால் தடை செய்யபட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெம்பக்கோட்டை அருகே அரசால் தடை செய்யபட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள கணஞ்சாம்பட்டி பகுதி வீடுகளில் வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளா் கமல் தலைமையிலான போலீஸாா் சனிகிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த அழகுமுத்து (28) வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட 70 புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகுமுத்துவை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.