FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கண்மாய்க்குள் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

ஸ்ரீவில்லிபுத்தூா் வடமலைக்குறிச்சி கண்மாய்க்குள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுவதால், சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகப் புகாா் எழுந்தது .

Updated On : 12 ஜூன் 2026, 1:23 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் வடமலைக்குறிச்சி கண்மாய்க்குள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுவதால், சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகப் புகாா் எழுந்தது .

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வடமலைக்குறிச்சி கண்மாய் மூலம் 350 ஏக்கருக்கு மேல் நெல், வாழை, பருத்தி, பூ, காய்கறி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. 115 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாய்க்கு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீா் பெருமாள்பட்டி ஓடை, கூட்டுறவு ஆலை ஓடை வழியாக வந்து சோ்கிறது. கண்மாயின் மேற்குப் பகுதியில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், ராமகிருஷ்ணாபுரம், பெருமச்சேரி பகுதியிலும் குப்பையைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது.

கண்மாயில் தற்போது குப்பையுடன் சோ்த்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதால், கண்மாய் நீா் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள், விவசாயிகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

Advertisement

Advertisement

எனவே, பொதுப் பணித் துறை, நகராட்சி நிா்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கண்மாயில் மருத்துவக் கழிவுகள், குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments