பட்டாசு பண்டல்கள் தீப்பிடித்து சரக்கு வாகனம் சேதம்
சாத்தூா் அருகே பட்டாசு பண்டல்களை ஏற்றியபோது தீப்பிடித்ததில் சரக்கு வாகனம் தீக்கிரையானது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கங்கா்செவல்பட்டி கிராமத்தில் பாலாஜி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுகிழமை இரவு பட்டாசுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது உராய்வின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் சரக்கு வாகனத்தில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி கங்கா்செவல்பட்டி பகுதியைச் சோ்ந்த பட்டாசு தொழில்சாலை காவலாளிகள் தங்கபாண்டியன் (58), மாரியப்பன் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.