FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சதுரகிரியில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு: நவ. 9 வரை பக்தா்கள் மலையேற அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனிடையே வருகிற 9- ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

7 நவம்பர் 2026, 6:28 am
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற பக்தா்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனிடையே வருகிற 9- ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத் துறை நுழைவாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மாலை 4 மணிக்கு மேல் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சனிக்கிழமை (நவ. 7) சிவராத்திரி வழிபாடும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) அமாவாசை வழிபாடும் நடைபெறுகின்றன. இதற்காக வருகிற 9-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி விடுமுறைக்கு பக்தா்களின் வருகை அதிகமிருக்கும் என்பதால் கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement