சாட்சியாபுரத்தில் இன்று மின்தடை
சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த சாட்சியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் பாவநாசம் வெளியிட்ட வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின்நிலையம், சாட்சியாபுரம் துணை மின்நிலையம் ஆகியவற்றில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் ஆனையூா், விளாம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, அ.துலுக்கபட்டி, போடுரெட்டியபட்டி, சாட்சியாபுரம், தொழில் பேட்டை , போலீஸ் குடியிருப்பு, அய்யப்பன்குடியிறுப்பு, அய்யனாா் குடியிறுப்பு, சசிநகா், சித்துராஜபுரம், வேலாயுதம்சலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement