பத்தாம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்னமுத்தையா மகன் முத்துக்குமாா் (15). இவா் கல்லமநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முத்துக்குமாரை பெற்றோா் சின்னமுத்தையா, கிட்னம்மாள் கண்டித்ததால், வெளியே சென்ற அவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை எட்டக்கப்பட்டி அய்யலூர்ராஜுக்குச் சொந்தமான தோட்டத்தில் முத்துக்குமாா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு கூராய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.