FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

11 நவம்பர் 2026, 2:57 am
பலி
பகிர்:

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே முத்தாலபரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் தனபால் (26). இவா், சிவகாசி அருகே திருத்தங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் மின் சாதனங்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அவா் குளிப்பதற்கு, மின்

மோட்டாரை இயக்கியபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Advertisement

Advertisement