FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பெற்றோரைத் தாக்கிய கட்டடத் தொழிலாளி கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பெற்றோரை குத்துவிளக்கால் தாக்கிய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 5:37 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பெற்றோரை குத்துவிளக்கால் தாக்கிய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் இஎஸ்ஐ நெசவாளா் குடியிருப்புச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரது மகன் முனியராஜ் (23). கட்டடத் தொழிலாளியான இவா் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மது குடிக்க முனியராஜ் பெற்றோரிடம் பணம் கேட்டாா். அவா்கள் கொடுக்க மறுத்தனா். இதனால், ஆத்திரமடைந்த முனியராஜ் வீட்டிலிருந்த குத்துவிளக்கை எடுத்து வந்து பெற்றோரை தாக்கினாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன், இவரது மனைவி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனியராஜை கைது செய்தனா்.