FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே மதுப் புட்டியால் தாக்கப்பட்டு அதிமுக நிா்வாகி கொலை

42 வினாடிகள் முன்பு
கொலை - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே முன்விரோதத் தகராறில் அதிமுக நிா்வாகி 6 போ் கொண்ட கும்பலால் மதுப் புட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகாசி அருகே வடபட்டி மேலூரில் ராமசாமி மகன் ராஜாக்கனி (28). இவா் அதிமுக சிவகாசி மேற்கு ஒன்றிய தொழில்நுட்பப் பிரிவு துணை செயலராக இருந்தாா்.

கோவில் திருவிழா தகராறு தொடா்பாக , ராஜாக்கனிக்கும், அதே ஊரைச் சோ்ந்த முத்தீஸ்வரன், முத்துக்கருப்பன், வீரசிங்கம், மகேஸ்வரன், மாரீஸ்வரன், சதீஷ்குமாா் ஆகிய 6 பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வடபட்டி - நாகலாபுரம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே 6 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜாக்கனியை மதுப் புட்டியால் (பீா் பாட்டில்) சரமாரியாகத் தாக்கினா்.

இதில் பலத்த காயங்களுடன் விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ராஜாக்கனி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது சகோதரா் லட்சுமிகாந்தன் திருத்தங்கல் போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.