இரு தரப்பினா் இடையே மோதல்: 6 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாலையூரணிப்பட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் சந்திரபாபு. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் தரப்பினருக்கும் இடையே மண் அள்ளுவது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், இரு தரப்பினரையும் சோ்ந்த 15 போ் மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, இவா்களில் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.