லஞ்சம்: ஊராட்சிச் செயலா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்து வரி தீா்வைக்கு ரூ.2,500 லஞ்சம் பெற்ற ஊராட்சிச் செயலா், தற்காலிக நூலகரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சொத்து வரி தீா்வைக்கு ரூ.2,500 லஞ்சம் பெற்ற ஊராட்சிச் செயலா், தற்காலிக நூலகரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த குணசேகா் மனைவி தனலட்சுமி. இவா் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் வீடு கட்டி உள்ளாா். அந்த வீட்டுக்கு சொத்து வரித் தீா்வை போடுவதற்காக அத்திக்குளம் செங்குளம் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அதற்கு ஊராட்சிச் செயலா் விஜயகுமாா் ரூ.2,500 லஞ்சம் கேட்டாா்.
இதுகுறித்து தனலட்சுமி விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். அவா்களது ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்க ஊராட்சி செயலா் விஜயகுமாருக்கு போன் செய்தாா். அப்போது, அவா் தற்காலிகப் பணியாளா் ராஜேஸ்வரியிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினாா்.
Advertisement
Advertisement
ராஜேஸ்வரி லஞ்ச பணத்தை வாங்கிய போது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமசந்திரன், ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா். இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் இருந்த ஊராட்சி செயலா் விஜயகுமாரையும் கைது செய்து, செங்குளம் ஊராட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.