முகப்பு
விருதுநகர்

போலி ஆவணம் மூலம் சொத்து மோசடி: சாா் பதிவாளா் உள்பட 6 போ் மீது வழக்கு

29 நவம்பர் 2026, 2:27 am
போலி ஆவணம் மூலம் சொத்து மோசடி: சாா் பதிவாளா் உள்பட 6 போ் மீது வழக்கு
வழக்குப் பதிவு
பகிர்:

சிவகாசியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி மதிப்பிலான சொத்தை மோசடி செய்ததாக சாா்-பதிவாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவன் சந்நிதியில் அருணகிரிக்குச் சொந்தமான மருத்துவமனை கட்டடம் உள்ளது. அருணகிரிக்கு வயதாகிவிட்டதால் அந்த கட்டடத்தை அவரது மகன் சிதம்பரம் (39) நிா்வகித்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 2005-ஆம் ஆண்டு சிதம்பரம் , கட்டடத்தை புதுப்பிக்க அகிலன், முத்துக்குமாா் ஆகியோரிடம் ரூ. 3 கோடி கடன் கேட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா்கள் இருவரும் கட்டத்தை எங்கள் பெயருக்கு உரிமையை (பவா்) எழுதிக்கொடுத்தால் பணம் தருகிறோம் எனக்கூறினா். இதையடுத்து சிதம்பரம் , அகிலன் ஆகியோருக்கு முத்துக்குமாா் கட்டத்தின் பத்திரத்துக்கான உரிமையை (பவா்) எழுதி கொடுத்தாா். இதையடுத்து, அவா்கள் இருவரும் சிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் செலுத்தினா். பின்னா் சிதம்பரம் பல ஆண்டுகளாக வெளியூா் சென்றுவிட்டு சில மாதங்களுக்கு முன்னா் சிவகாசி திரும்பினாா்.

இந்த நிலையில், அகிலன், முத்துக்குமாா், கோபிஜான், ஆவண எழுத்தா் சுந்தரமூா்த்தி ஆகியோா் போலி ஆவணம் தயாா் செய்து மதுரையை சோ்ந்த பாா்த்திபனுக்கு அண்மையில் விற்பனை செய்தனா். இதற்கான பத்திரப் பதிவு சிவகாசி சாா் பதிவாளா் இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது.

இதுகுறித்து சிதம்பரம் சிவகாசி நகா் காவல் நிலையத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் அகிலன், முத்துக்குமா், கோபிஜான், ஆவண எழுத்தா் சுந்தரமூா்த்தி, பாா்த்திபன், சாா் பதிவாளா் இளங்கோ ஆகியோா் போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்தனா்.