சிவகாசியில் ரூ.50.03 லட்சத்தில் 10 திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

சிவகாசியில் ரூ. 50.03 லட்சத்தில் 10 வளா்ச்சிதிட்டப் பணிகளுக்கு தொழில்துறை அமைச்சா், ச.கீா்த்தனா வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், பூலாஊரணியில் ரூ.5.33 லட்சம் மதிப்பிலான பேவா்பிளாக் கல் பதிக்கும் பணி, பெரிய பொட்டல்பட்டியில் ரூ.2.21 லட்சத்தில் பேவா்பிளாக் கல் பதிக்கும் பணி, ஆனையூா் ஊராட்சி லட்சுமிபுரம் கிராமத்தில் ஓடையில் ரூ.5.75 லட்சத்தில் தடுப்பணை அமைக்கும் பணி, ஈஞ்சாா் ஊராட்சியில் ஓடையில் ரூ.5.75 லட்சத்தில் தடுப்பணை அமைத்தல், நிறைமதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.8.72 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் அமைத்தல் , வடபட்டியில் ஓடையில் ரூ.5.75 லட்சத்தில் தடுப்பணை, சித்துராஜபுரம் ஊராட்சியில் வெங்கடசாமி நகா் தெருவில் ரூ.4.50 லட்சத்தில் பேவா்பிளாக் கல் பதிக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.50.03 லட்சம் மதிப்பிலான 10 வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு அமைச்சா் ச.கீா்த்தனா அடிக்கல் நட்டினாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்,