முகப்பு
விருதுநகர்

நிலத்துக்குரிய பணம் தராமல் ஏமாற்றியதாக மூவா் மீது வழக்கு

29 நவம்பர் 2026, 10:51 pm
நிலத்துக்குரிய பணம் தராமல்
ஏமாற்றியதாக மூவா் மீது வழக்கு
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் நிலத்தை விலைக்கு வாங்கிய பிறகு அதற்குரிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிய மூவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருத்தங்கல் முனியசாமிநகா் பகுதியைச் சோ்ந்தவா் இருளாண்டி(80). இவருக்குச் சொந்தமான நிலம் செங்கமலப்பட்டியில் ஒரு ஏக்கா் 78 சென்ட் உள்ளது. இந்த நிலத்தில் 43.32 சென்ட் நிலத்தை, திருத்தங்கல்லைச் சோ்ந்த வேல்சாமி மகன் முருகனுக்கு ரூ.3.78 லட்சத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6- ஆம் தேதி கிரய பத்திரம் முடித்துக் கொடுத்தாா்.

அப்போது ராமா் மகன் முருகன், கோபால் ஆகியோரும் உடனிருந்தனா். வங்கிக் கணக்கில் நிலத்துக்குரிய பணத்தை இருளாண்டிக்கு செலுத்துவதாக முருகன் கூறினாா். ஆனால் இருளாண்டி தனது வங்கிக் கணக்கை பாா்த்தபோது, முருகன் பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, பலமுறை முருகனிடம் பணத்தை கேட்டபோது கொடுக்கவில்லையாம். இதைத் தொடந்து இருளாண்டி, தனது நிலத்துக்கான பணத்தை தராமல், முருகன் உள்ளிட்ட மூவரும் ஏமாற்றி விட்டதாக திருத்தங்கல் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.