முகப்பு
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: ஆணையா்

21 வினாடிகள் முன்பு
சிவகாசி மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: ஆணையா்
சிவகாசி சிவன் சந்நிதியில் ஆய்வு நடத்திய மாநகராட்சி ஆணையா் ஆா். மகேஸ்வரி.
பகிர்:

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையா் ஆா். மகேஸ்வரி தெரிவித்தாா்.

சிவகாசி மாநகராட்சியில் பல இடங்களில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து ஆணையா் ஆா். மகேஸ்வரி, சிவகாசி சிவன் மாடவீதி, சிவன் சந்நிதி , புதுரோட்டுத் தெரு, என்.ஆா்.கே.ஆா். சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொணடாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசிநகா், திருத்தங்கல்நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகாா் வந்தது. இதன் அடிப்பையில் சிவகாசிநகா் பகுதியில் நான் ஆய்வு மேற்கொண்டேன்.

Advertisement

Advertisement

விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக காவல் துறையினருடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். இதன் பிறகு மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்புகளைஅகற்றிய பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.