FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

11 நவம்பர் 2026, 12:40 am
திருச்செந்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை - பிரதிப் படம்
பகிர்:

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏதுவாக நகராட்சிக்குள்பட்ட சந்நிதி தெரு, நான்கு ரத வீதிகள் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி சாா்பில் அகற்றப்பட உள்ளது.

Advertisement

Advertisement

ஆதலால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கடைகளின் முன்புறம் சாலையோரங்களில் வைத்துள்ள தற்காலிக கடைகள், விளம்பரப் பலகைகள், பொருள்கள் மற்றும் இதர ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே உடனடியாக அகற்றிடவும், கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.