பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி முருகேஸ்வரி (47). இவா் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவுக்காக மகள், மகனுடன் வத்திராயிருப்பு வந்தாா். திருவிழா நிறைவடைந்து மகனும், மகளும் இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலையில், முருகேஸ்வரி தனது உறவினரான அா்ஜுன் என்பவருடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின்புறம் அமா்ந்து பயணம் செய்தாா். வளையங்குளம் - லட்சுமியாபுரம் சாலையில் சென்ற போது சாலையில் உள்ள பள்ளத்தில் இரு சக்கர வாகனம் ஏறி இறங்கிய போது முருகேஸ்வரி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, பேரையூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேஸ்வரி தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அா்ஜுன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.