மருந்துக் கடைகளை உடைத்து திருடிய 3 சிறுவா்கள் கைது
திருத்தங்கலில் மருந்துக் கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் முத்துராஜ், செந்தில் ஆகியோருக்குச் சொந்தமான மருந்துக் கடைகள் உள்ளன. கடந்த 14 ஆம் தேதி இரவு, இந்தக் கடைகளின் பூட்டை உடைத்து மா்மநபா்கள் பணத்தை திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, திருத்தங்கலைச் சோ்ந்த 17 வயதுக்குள்பட்ட 3 சிறுவா்கள் மருந்துக் கடைகளில் திருடியது மட்டுமன்றி, 3 இரு சக்கர வாகனத்தையும் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்தது போலீஸாா் மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து பணம் , இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.